பெருமான் மெய்யறிவன் – கவிதைகள்
துளிரும் சிறகு, கவிஞர் பெருமான் மெய்யறிவன் அவர்களின் முதல் கவிதை நூல். இத்தொகுப்பானது ‘பயணம், துளிரும் சிறகு, மௌன வெளி, குறுங்கவிதை’ என நான்கு பிரிவுகளைக் கொண்டுள்ளது. நவீன தமிழ் இலக்கிய இதழ்களில் வெளிவந்த கவிதைகளின் தொகுப்பு. 1997-ஆம் ஆண்டு ‘உள்முகம்’ வெளியீடாக முதல் பதிப்பு வெளியானது. மனித உறவுகளுக்கிடையே உள்ள மனோரீதியான இடைவெளிகளை உள்ளார்ந்த உணர்வுகளுடன் இத்தொகுப்பில் உள்ள பல கவிதைகளும் வெளிப்படுத்துகின்றன.
கனவை விதைப்பவன், கவிஞர் பெருமான் மெய்யறிவன் அவர்களின் இரண்டாவது கவிதை நூல். இத்தொகுப்பானது ‘பட்டாம்பூச்சி பறக்கிறது, கனவை விதைப்பவன், மனக்குமிழி, புராதனம் தேடி’ என நான்கு பிரிவுகளின் கீழ் 69 கவிதைகளைக் கொண்டுள்ளது. உள்ளார்ந்த உணர்வுகளின் வெளிப்பாடாக, உள்முகத் தேடலின் வெளிப்பாடாக, கனவுகளை விதைத்து உயரம் பறக்க விரும்பும் மனதின் வெளிப்பாடாக, இத்தொகுப்பின் கவிதைகள் அமைந்துள்ளன.
அவனுக்கொரு வீடு வேண்டும், கவிஞர் பெருமான் மெய்யறிவன் அவர்களின் மூன்றாவது கவிதை நூல். இத்தொகுப்பானது வாழ்க்கையில் முன்னேற பல நகரங்களுக்கும் நாடுகளுக்கும் பணி நிமித்தமாக இடம்பெயர்ந்து வாழ நேரிட்ட காலத்தின் அனுபவங்களினூடாக எழுதப்பட்ட கவிதைகளை உட்பொருளாக கொண்டது
மனதுக்கு இனியவை, கவிஞர் பெருமான் மெய்யறிவன் அவர்களின் நான்காவது கவிதை நூல். இத்தொகுப்பானது மனதுக்கு இனிமை தரக்கூடியவற்றைத் தேடும் மனோபாவத்தின் வெளிப்பாடு. இனிய நினைவுகளும் அனுபவங்களும் இறைவனை விரும்பும் மனதும் வேண்டி கவிதைகள் வெளிப்பட்டுள்ளன.
வாக்களிக்கும் காலம், கவிஞர் பெருமான் மெய்யறிவன் அவர்களின் ஐந்தாவது கவிதை நூல். இத்தொகுப்பிலுள்ள பெரும்பகுதி கவிதைகள் அகவிதை தன்மையுடன் வெளிப்பட்டுள்ளன. அரசியல் எந்தளவிற்கு இளையோரை பாழ்படுத்துகிறது என்பதனையும், அதனால் அவர்கள் இழக்கும் வாழ்க்கை நிலையினையும் இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் வெளிப்படையாக நேரிடையாகப் பேசுகின்றன.